ஏடிஎம்களில் வாடிக்கையாளர் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ், ரூபாய் நோட்டுகள் மாற்றம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, மக்களுக்கு எளிதில் பணம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒருவர் ஏடிஎம்மில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இனி ஒருவர் ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். நம் நாட்டில் அதிகப்படியான வங்கிகள் கிராமப்புற, புறநகர் பகுதிகளில் உள்ளன. எனவே கிராம மக்களை அதிகம் சிரமத்துக்கு உள்ளாக்காமல் பணம் எடுக்க வகை செய்வது குறித்து ஆலோசித்தோம். தபால் நிலையங்களில் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை எடுக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்றியுள்ளோம். இது இன்று முதல் நடைமுறைக்கு வரும். ஓரிரு நாட்களில் அனைத்து ஏடிகம்களில் இருந்தும் 2000 ரூபாயை எடுக்கலாம். அனைத்து வங்கி ஊழியர்களும் இரவு வரை கடுமையாக பணியாற்றி வருகிறார்கள். இணையதள வழி பணப்பரிமாற்றங்களுக்கான கட்டணங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 24ம் தேதி வரை மருந்தகங்களில் மருந்துகள் வாங்க பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரம் மருத்துவமனைகளில் முன்பணம் செலுத்த பழையே நோட்டுகளை பயன்படுத்த முடியாது. வணிகர்கள் மற்றும் நடப்புக் கணக்கு வைத்திருப்போம் வங்கி கணக்குகளில் இருந்து வாரத்துக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு பணப் பரிவர்த்தனையை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...