‛‛அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளை நடத்துவதிலும், அவற்றின் முடிவுகளை வெளியிடுவதிலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சுறுப்சுறுப்பாக உள்ளது,‛‛ என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி கூறினார்.
தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடந்தது.சென்னை திருவல்லிக்கேணி பள்ளியில் நடந்த தேர்வை பார்வையிட்ட டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி கூறியதாவது: ஆக.,9ம் தேதி வெளியான அறிவிக்கையின்படி இளம்நிலை உதவியாளர் தட்டச்சர் உள்ளிட்ட 5,451 அரசு பணியிடங்களுக்காக, 5,296 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேர் இதற்கு விண்ணப்பித்து இருந்தனர். இத்தேர்வை, 5,296 கண்காணிப்பாளர்கள், 76 ஆயிரத்து 216 துணை கண்காணிப்பாளர்கள் கண்காணித்தனர். 12 மாதங்களில், 22 தேர்வு முடிவுகள்: கடந்த, 12 மாதங்களில், டி.என்.பி.எஸ்.சி., மூலம், 15 எழுத்துத் தேர்வுகள், 13 போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 12 மாதங்களில், 22 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஜூன், 16ம் தேதி வரை நடந்த அனைத்து போட்டி தேர்வுகளில், டி.இ.ஓ., தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு விட்டன. டி.இ.ஓ., தேர்வு முடிவும் விரைவில் வெளியிடப்படும். இதுதவிர, இன்னும் 10 தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். அத்தேர்வுகள், ஜூன், 16ம் தேதிக்கு பிறகு நடந்தவை. 85 பணியிடங்கள் கொண்ட குரூப் 1 தேர்வுக்கான தேதி, வரும், 9ம் தேதி வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...