'தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், இன்று முதல், போதிய நிதி
வசதி அளிக்கும் வரை செயல்படாது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைப்பு: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து
பணியாளர்கள் சங்க கவுரவ பொதுச் செயலர் குப்புசாமி, மாநில தலைவர் மேசப்பன், பொது செயலர் முத்துபாண்டியன் கூட்டாக விடுத்துள்ள
அறிக்கை:ரிசர்வ் வங்கி, சமீபத்தில் அனுப்பிய சுற்றறிக்கைப்படி, 500, 1,000
ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொடக்க
வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், வரவு - செலவு, வாய்மொழியாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 4,654 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும்,
உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித சேவையும் செய்ய இயலாமல்
பாதித்துள்ளது. சேமிப்பு கணக்கில் இருந்து, உறுப்பினர்களுக்கு பணம் வழங்க
இயலவில்லை. அடகு நகைகளை, சுப காரியங்களுக்கு மீட்க வரும்
வாடிக்கையாளர்களுக்கு தர முடியவில்லை.
இயலாத நிலை
உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் சேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலையில்,
சங்கங்களை திறந்து வைத்து பணியாற்றுவது மிகுந்த சிரமம். விவசாய பணிகளுக்கு
உரம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.இன்று, அந்தந்த மாவட்ட மத்திய
கூட்டுறவு வங்கிகளுக்கு, ஒட்டு மொத்த பணியாளர்கள் நேரில் சென்று, நிதியுதவி
கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி வசதி செய்து தரும் வரை, சங்கங்கள்
செயல்படாது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...