'உங்கள்
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வுகளுக்கு, புத்தாடை உடுத்தி,
மகிழ்ச்சியோடு செல்லுங்கள்,'' என, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பேராசிரியை
பர்வீன் சுல்தானா நம்பிக்கை ஊட்டினார்.
'தினமலர்' நாளிதழின், டி.வி.ஆர்., அகாடமி நடத்திய, 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியில், பேராசிரியை பர்வீன் சுல்தானா பேசியதாவது:சிதறவிடாதீர்ஒவ்வொரு மாணவரும் தங்கள் வெற்றி, தோல்வியை முடிவு செய்து கொள்ளுங்கள். தேர்வுகளிலும், போட்டிகளிலும் நீங்கள் ஜெயித்து விட்டால், உங்கள் வாழ்க்கையை நீங்களே தீர்மானிக்கிறீர்கள்; இல்லையென்றால், உங்கள் வாழ்க்கையை மற்றவர்கள் தீர்மானிப்பர்.
தேர்வு அறையில் கவனத்தை சிதற விடாதீர். கிடைக்கும் வாய்ப்புகளை தவற விட்டால், வாழ்க்கையை தவற விடுவீர்கள். தேர்வு தொடர்பாக, நண்பர்களுடன் தேவையின்றி விவாதிப்பதை, மாணவர்கள் நிறுத்த வேண்டும். புத்தகத்திலுள்ள அம்சங்களை விரும்பி படியுங்கள். புத்தகமா; நீங்களா என, போட்டி போட்டு படித்து, ஜெயிக்க வேண்டும்.
அதேபோல், தேர்வோ, போட்டியோ, எதுவானாலும், அதுவே உன் எதிர்காலத்தை தீர்மானம் செய்கிறது. அப்படிப்பட்ட தேர்வுக்கு மகிழ்ச்சியாக செல்லுங்கள். புத்தாடை உடுத்தி, உன்னை அடையாளப்படுத்தும் தேர்வை கொண்டாடு; நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய். தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றால், உனக்கு எதிர்காலத்தில் நல்ல வேலை கிடைத்து, அதிக சம்பளம் கிடைக்கும்.
புரிந்து படித்தால்புத்தகத்தை புரிந்து, படித்து தேர்வு எழுதினால், நீ பலருக்கு சம்பளம் தரும் இடத்திற்கு வருவாய். இந்த உறுதியுடன் கடினமாக உழைத்து, பொதுத் தேர்வில் ஜெயித்துக் காட்டுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
அதிக மதிப்பெண்ணுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள்
இந்து மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், வி.சி.கோபி ஆனந்த் - இயற்பியல்; ஜி.சரவணன் - வேதியியல்; வி.எஸ்.சீனிவாசன் - கணக்கு பதிவியல்; ஆர்.ரமேஷ் - கணினி அறிவியல்.டி.ராஜ் (கணிதம்), ரத்தன் ராஜ் (வணிக கணிதம்) - பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப் பள்ளி, டி.சேகர் (உயிரியல்) - சென்னை மேல்நிலைப் பள்ளி, ஏ.பி.பழனி (பொருளியல்) - ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி, பி.முருகன் (வணிகவியல்) - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதுார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...