எதிர்காலத்தில்
ரூபாய் நோட்டுகளில் ஜிபிஎஸ் சிப் பொருத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்று
இஸ்ரோ தலைவர் டாக்டர். ஏ.எஸ்.கிரண்குமார் கூறினார்.
கர்நாடக மாநிலம் தார்வாரில் நேற்று பல்வேறு பள்ளிக்கூடங்கள்,
கல்லூரிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் இஸ்ரா
தலைவர் டாக்டர் ஏ.எஸ்.கிரண்குமார்
பேசியதாவது:தேச துரோக செயல்கள், தீவிரவாத செயல்களை ஜிபிஎஸ் கருவிகளை கொண்டு
கண்டறிவதற்கான தொழில்நுட்பம் நமது நாட்டில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை.
மத்திய அரசு 500, 1,000 நோட்டுகளை செல்லாது என அறிவித்து, புதிதாக 2
ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் விட்டுள்ளது. அதில் மங்கள்யான்
செயற்கைக்கோள் அச்சிடப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.இந்த நோட்டில் ஜிபிஎஸ்
சிப் பொருத்தியிருப்பதாக கூறுவதில் உண்மையில்லை. காரணம் அந்த அளவுக்கு நமது
நாட்டில் விஞ்ஞானம் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. தற்போது, இந்தியாவில்
இயங்கிவரும் செயற்கைக்கோள் உதவியுடன், விவசாயிகளின் சாகுபடிக்கான
ஆலோசனைகள், வானிலை ஆய்வுமைய தகவல்கள், மழை, வெயில், காற்று போன்ற தட்பவெட்ப
நிலை குறித்து கணிக்க மட்டுமே பயன்படும். எனவே, புதிய ₹2 ஆயிரம் நோட்டில்
ஜிபிஎஸ் சிப் பொருத்தியிருப்பது என்பது தவறான தகவல். எதிர்காலத்தில்
வேண்டும் என்றால் ரூபாய் நோட்டுகளில் ஜிபிஎஸ் கருவி இணைப்பதற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...