'அரசு ஊழியர்கள், புதிய பாஸ்போர்ட் பெறவோ, புதுப்பிக்கவோ
விரும்பினால், அரசுக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்' என, தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், புதிய பாஸ்போர்ட் பெறவோ,
புதுப்பிக்கவோ, அரசிடம் இருந்து, தடையில்லா சான்றிதழ் மற்றும் அடையாள
சான்றிதழ் பெற வேண்டும்.
அதற்காக, விண்ணப்பிக்கும் முறை உள்ளது. சமீபத்தில்,
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.
அதில், அரசு ஊழியர்கள், அரசிடம் இதற்கான அனுமதி பெறுவதற்கு முன், எதற்காக
வெளிநாடு செல்கிறோம் என்பதற்கான முழு விபர கடிதம் வழங்க வேண்டும் என
தெரிவித்துள்ளது. மேலும், அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான படிவ
மாதிரியையும், மத்திய அரசு அளித்துள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், இதுபோன்ற
விண்ணப்பத்துடன், தகவல் கடிதத்தையும் சேர்த்து வழங்க வேண்டும் என, தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...