Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இயல்பு நிலைக்கு திரும்பாத ஏ.டி.எம்.கள்: வங்கிகளில் அலைமோதும் பொதுமக்கள்-நாமக்கல்-தினமணி

        தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) வெள்ளிக்கிழமை முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பல இடங்களில் அவை செயல்படாததால், மக்கள் மீண்டும் வங்கிகளையே நாடிவருகின்றனர்.

தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் புழக்கத்தில் உள்ள நோட்டுகளை 10 ஆம் தேதி முதல் வங்கிக் கிளைகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் 11 ஆம் தேதி முதல் தங்கள் பண அட்டைகளைப் பயன்படுத்தி தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் பணத்தை எடுக்க முடியும் எனவும் அரசு அறிவித்திருந்தது.

இதனால் கடந்த 3 நாள்களாக வங்கிகளில் மக்கள் பணத்தை மாற்றுவதற்காகக் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் அறிவிக்கப்பட்டதுபோல பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படவில்லை. இதனால், பணம் எடுக்க பொதுமக்கள் வங்கிகளில் குவிந்தனர்.

பூட்டப்பட்ட ஏடிஎம்கள்: நாமக்கல் மாவட்டத்தில் 268 வங்கி கிளைகள், 380 ஏடிஎம் மையங்கள் உள்ளன. வெள்ளிக்கிழமை பகல் 12 மணி வரை பெரும்பாலான ஏடிஎம்கள் திறந்திருந்தன. அதன்பிறகு அடைக்கப்பட்டன. சனிக்கிழமை காலை ஏடிஎம்களில் பணம் நிரப்பபட்டது. இந்த பணமும் ஒரு மணி நேரத்திற்குள் தீர்ந்ததால் காலை 11 மணிக்கே அடைக்கப்பட்டது.

வங்கியோடு இணைந்த ஏடிஎம் மையங்கள் செயல்பட்ட போதிலும் அதில் இருந்து பணத்தை எடுக்க மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க நேர்ந்தது. இதனால் வங்கிகளில் இருந்தே பணத்தை எடுப்பதற்காக மீண்டும் மக்கள் வங்கிகளை நாட ஆரம்பித்துள்ளனர்.

இதன் காரணமாக வங்கிக் கிளைகளில் சனிக்கிழமை காலை முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை 8 மணிக்கு வந்தவர்கள் கூட 3 மணி நேரத்துக்கும்மேல் வரிசையில் காத்திருந்து பணம் வாங்கிச் சென்றனர்.

ரூ.2000 நோட்டு இல்லை: ஏடிஎம் இயந்திரங்களில் தற்போது 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கின்றன. 2000 ரூபாய் நோட்டை வழங்கும் வகையில் இயந்திரங்களை மாற்ற சில நாள்கள் ஆகும் என்பதால் அதற்குப் பிறகே ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

100 ரூபாய் நோட்டு மட்டும் வைக்க வேண்டி இருக்கிறது. இந்த நோட்டும் அதிகப்படியான பயன்பாடு காரணமாக உடனடியாக காலியாகி விடுகிறது. ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படுவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தைத் தவிர்க்க கூடுதல் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஏடிஎம்களிலும் பணம் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்கும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அஞ்சலகத்திலும் கூட்டம்: வங்கிகளைபோல் அஞ்சலகங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு சில வங்கிகள் தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பணத்தை மாற்றித்தருவோம் எனக் கூறியதால் கிராமப்புற மக்கள் வேறு வழி இல்லாமல் அஞ்சலகம் அல்லது பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளுக்குச் சென்றனர். இதனால் இந்த இரண்டு இடத்திலும் மக்கள் கூட்டம் மாலை வரையிலும் அதிகமாக இருந்தது.

சாமியான பந்தல்: வங்கிகளுக்குள் அதிகபட்சம் 50 பேர் வரை நிற்கலாம். ஆனால் வங்கிகளில் முன்பு 300 பேர் வரை காத்திருந்ததால் சில இடங்களில் சாமியான பந்தல் போட்டு பொதுமக்களுக்கு ஒரு சில வங்கிகள் உதவின. மேலும் கூட்டம் அதிகமாக இருந்த நகர்ப்புற வங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

இரவு 9 மணி வரை வங்கிகள் செயல்பட கோரிக்கை: சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டதால் பணத்தை மாற்றவும், பணத்தை வங்கிக் கணக்கில் கட்டவும் இந்த இரண்டு நாள்கள் உதவும் என அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால் சனிக்கிழமை வங்கிக்கு சென்ற அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் நீண்ட நேரம் காத்திருந்தும் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தவோ, ரூபாய் நோட்டை மாற்றவோ முடியாமல் திரும்பினர்.
இதுகுறித்து  து.ராமராஜ் கூறியது, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் சனிக்கிழமை நாள் முழுவதும் காத்திருந்தும் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தவோ, ரூபாய் நோட்டை மாற்றவோ முடியவில்லை

ஏடிஎம்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை வங்கிகளில் கூட்டம் குறைய வாய்ப்பில்லை. இதனால் வரும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வங்கி வேலை நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive