Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திருமணம் விசேஷங்களுக்கு சலுகை; பணம் மாற்றுபவர்களுக்கு மற்றுமொரு 'செக்'

திருமண விசேஷங்கள் வைத்திருப்பவர்கள் திருமண அழைப்பிதழை காண்பித்து வங்கிக் கணக்கில் இருந்து அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் எடுக்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது.


பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், திருமண விசேஷங்கள் வைத்திருப்பவர்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம். மணமகன், மணமகள் அவரகளது தாய், தந்தை கணக்குகளில் இருந்து மட்டுமே பணம் எடுக்க முடியும்.

வர்த்தகர்கள் வாரத்திற்கு ரூ.50,000 வரை பணம் எடுக்கலாம். விவசாயிகள் வங்கியில் இருந்து வாரத்திற்கு ரூ.25 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம். விவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டுமே தனி நபர் ஒருவர் 4,500ரூபாய் பழைய நோட்டுகளை அளித்து புதிய நோட்டுகளைப் பெற முடியும். 18ம் தேதி முதல் 2000 ரூபாய் மட்டுமே வங்கியில் மாற்ற முடியும். அதிகம் பேர் பணம் எடுக்க வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குரூப் சி , ராணுவ வீரர்கள் தங்களது சம்பள முன் பணமாக ரூ.10,000 எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.





1 Comments:

  1. அதாவது, வேண்டுமென்றே கட்டத் தவறிய ‘கிங் பிஷர்’ மதுபான ஆலை அதிபரான விஜய் மல்லையாவின் வாராக்கடன் ரூ. 1201 கோடி உட்பட, 63 பெருமுதலாளிகளின் வாராக்கடன் ரூ. 7016 கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியா [SBI]. 30-6-16 காலகட்டம் வரை அந்த வங்கி மட்டும் ரூ 48000 கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது!

    மேலும், கே.எஸ். ஆயில் நிறுவனத்தின் 596 கோடி ரூபாய், சூர்யா பார்மஸி நிறுவனத்தின் 526 கோடி ரூபாய், கெட் பவர் நிறுவனத்தின் 400 கோடி ரூபாய், சாய் இன்ஃபோ சிஸ்டம் செலுத்த வேண்டிய 376 கோடி ரூபாயும் இதில் அடங்கும். இந்த தகவலை டி.என்.ஏ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    இப்போது அவரது கண்ணீரு பெருவெள்ளத்திற்கு காரணம் புரிந்திருக்கும். ஆனால், ஏழைகளின் கண்ணீர்????

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive