தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் தாக்கல் செய்த பதில் மனு மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மாநில அரசு சுகாதாரம், கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை. கழிப்பறை இருந்தால் அது பயன்பாட்டில் இல்லை. மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறைகளை பூட்டி வைத்து ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகி ன்றனர்.
அரசு பள்ளிகளில்கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுக்கு மத்திய அரசு 60 சதவீத நிதி வழங்குகிறது. மாநில அரசு 40 சதவீத நிதி வழங்காவிட்டால் எந்தப் பணியும் நடைபெறாது. கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஏதாவது செய்தால் அரசை பாராட்டலாம். எதுவும் செய்யாமல் இருந்தால் எப்படி பாராட்டுவது?துப்புரவுப் பணியாளர்களைப் பெற்றோர்-ஆசிரியர்கள் கழகம் நியமனம் செய்கின்றனர் என அரசு சொல்கிறது. பெற்றோர்-ஆசிரியர் கழகத்துக்கு எங்கிருந்து நிதி வருகிறது. துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.750 முதல் ரூ.1500 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்திற்கு இந்த காலத்தில் யார் வேலைக்கு வருவர்.மின்சார கட்டணம் செலுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.1500வழங்குவதாக அரசு கூறுகிறது.
கட்டணம் அதிகமாக வந்தால் தலைமை ஆசிரியர் சரி செய்து கொள்வார் என்கின்றனர். தலைமை ஆசிரியர் பணத்துக்கு எங்கு போவார். ஒவ்வொரு பள்ளிக்கும் இரு மாதத்துக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வருகிறது. அரசு பள்ளிகளுக்கு வர்த்தகப் பிரிவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. பள்ளி என்ன தொழிற்சாலையா? பள்ளிகளுக்கு வீட்டுக்கான மின் கட்டணம் நிர்ணயம் செய்தால் என்ன ஆகி விடும்.வழக்கறிஞர்கள் குழு பள்ளிக ளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி நாப்கின் வழங்கும் இயந்திரம் செயல்படவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் பதில் மனுவில் நாப்கின் இயந்திரம் செயல்படுகிறது எனக் கூறப் பட்டுள்ளது. இது நம்பும்படியாக இருக்கிறதா? என்றனர்.
அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, பள்ளிகளில் படிப்படியாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நாப்கின் இயந் திரத்தை பயன்படுத்த மாண விகள் தயங்குகின்றனர்.இதனால் அந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்றார்.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து குறைபாடுகளும் களையப்பட வேண்டும் என்றனர். பின்னர் விசாரணையை நவ.18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...