தொலைதூரக் கல்வி படிப்பு விவ ரங்களை கண்டிப்பாக கல்விச்சான்றிதழ்களில் குறிப்பிட வேண் டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தொலைதூரக்கல்வி நிறுவனங் களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்துக்கு நேரில் சென்று படிக்க இயலாதவர்கள் மேற்படிப்பை தொடர உதவும் வகையில் தொலை தூரக்கல்வி திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது.கிட்டதட்ட அனைத்து பல்கலைக்கழகங் களுமே தொலைதூரக் கல்வி திட்டத்தில் பட்டப் படிப்புகள், பட்டமேற்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகின்றன.தொலைதூரக் கல்வியில் படித்து பட்டம் பெறுவோருக்கு வழங்கப் படும் சான்றிதழ்களில் ஒருசில பல்கலைக்கழகங்கள்தொலை தூரக்கல்வி படிப்பு விவரத்தை குறிப்பிடுவதில்லை என பல்கலைக் கழக மானியக்குழுவுக்கு (யுஜிசி) புகார்கள் வரப்பெற்றன. இந்த நிலையில், யுஜிசி செயலாளர் ஜஸ்பால் எஸ்.சாந்து அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறி யிருப்பதாவது:-தொலைதூரக் கல்வி வழியில் படிப்புகளை நடத்தும் ஒருசில பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் பட்டச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழில் தொலைதூரக்கல்வி படிப்பு விவ ரத்தை குறிப்பிடாமல் பட்டங்களை வழங்குவது கண்டறியப்பட்டுள் ளது. இதனால், ரெகுலர் முறையில் வழங்கப்பட்ட பட்டமா அல்லது தொலைதூரக் கல்வியில் வழங்கப் பட்ட பட்டமா என்ற குழப்பம் ஏற் படுகிறது. இந்த குழப்பத்தை தவிர்க் கும் வகையில் தொலைதூரக் கல்வி படிப்பு விவரத்தை கல்விச் சான்றிதழ்களில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...