சென்னை: மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளுக்கு, மாணவ,
மாணவியரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப
படிவங்கள், அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், சென்னை, கிண்டி, கிங்
நோய்த் தடுப்பு நிலையத்திலும், 24 முதல் டிச., 2 வரை வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஆவண நகலுடன், 'செயலர்,
தேர்வுக் குழு, மருத்துவ கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10'
என்று முகவரிக்கு, டிச., 3க்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்ப படிவத்தின்
விலை, 300 ரூபாய். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு, விண்ணப்ப
கட்டணம் கிடையாது. மேலும் விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற
இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...