புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தினால் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண ரத்து சலுகை வரும் டிசம்பர்-1 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக , புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8-ஆம் தேதி இரவு அதிரடியாக அறிவித்தார். இதனால் உண்டான குழப்பமான சூழல் காரணமாக நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி 9-ம் தேதி அன்று இரவு அறிவித்தார்.
தொடர்ந்தும் பண நோட்டுகள் புழக்கத்தில் நிலவிய சிக்கல் காரணமாக இந்த சலுகையானது பின்னர் ர் நவம்பர் 14 , 18 மற்றும் 24 என அடுத்தடுத்து மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.
இந்த சலுகை இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிய உள்ள நிலையில், நிலைமை சீரடைய மேலும் சிலநாட்கள் தேவைப்படும் காரணத்தால் இந்த சுங்க கட்டண ரத்து சலுகை வரும் டிசம்பர்-1 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...