பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக் கான தேர்வில் தமிழக ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆனால், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தானே தேர்வு நடத்தி தேர்வுசெய்துகொள்கிறது.அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கியில் ஜுனியர் அசோசி யேட்(கிளார்க்) பணிக்கு 17 ஆயிரத்து 400 இடங்களை நிரப்ப கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. மொத்த பணியிடங்களில் தமிழகம் உட்பட ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப் பிட்ட காலிப் பணியிடங்கள் ஒதுக் கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டுக்கு 1,420 காலியிடங்கள் அறிவிக்கப் பட்டிருந்தது.முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தி முடிக்கப்பட்டு இறுதித் தேர்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தமிழக ஒதுக்கீட்டு காலியிடங்களில் கேரளா மற்றும் வடமாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ந் தெடுக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் தமிழகத் தைச் சேர்ந்த தேர்வர்கள் பாதிக்கப் பட்டிருப்பதாக புகார் கிளம்பி யுள்ளது.
இதுகுறித்து வங்கித் தேர்வு களுக்குப் பயிற்சி அளிக்கும் மையங்களின் நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:வங்கிப் பணிகளுக்கான போட்டித்தேர்வில் வினாக்கள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். இதே நடைமுறையைத்தான் பாரத ஸ்டேட் வங்கியும் பின்பற்றுகிறது. வினாக்கள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் இருக்காது. காலியிடங்கள் ஒவ்வொரு மாநிலத் துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை யில் ஒதுக்கப்பட்டிருந்தாலும் ஒரு விண்ணப்பதாரர் ஒரு மாநிலத் துக்கான காலியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.அந்த வகையில், இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தினரும் ஏதேனும் ஒரு மாநில ஒதுக்கீட் டுக்கான காலியிடங்களுக்கு மட் டுமே விண்ணப்பிக்க இயலும். வட இந்திய மாநிலங்களைச் சேர்ந் தவர்கள் தமிழக ஒதுக்கீட்டுக்கோ, கேரள ஒதுக்கீட்டுக்கோ விண் ணப்பிக்க முடியும். அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வட இந்திய மாநில ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இது வழக்கமான நடைமுறைதான்.எழுத்தர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளநிலையில், தமிழக ஒதுக்கீட்டுக்கு இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றிருப்பது உண்மைதான்.
வங்கித் தேர்வு என்பது ஒரு போட்டித்தேர்வாகும். தேர்வில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு போட்டியிடலாம். தேர்வில் பெறும் மதிப்பெண், நேர்காணல் அடிப்படையில் இறுதி தெரிவு நடைபெறுகிறது.பொதுவாகவே வட இந்திய மாநில மாணவர்கள் கல்லூரியில் படிக்கும்போதே வங்கித் தேர்வு களுக்கு படிக்க ஆரம்பித்துவிடு கிறார்கள். வங்கித் தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வும் அவர்களுக்கு அதிகம். ஆனால், வட இந்திய மாணவர்களுடன் ஒப்பிடும்போது தமிழக மாணவர்களுக்கு விழிப் புணர்வு குறைவுதான். பெரும் பாலானவர்கள் பட்டப் படிப்பு முடித்த பின்னரே வங்கித் தேர்வுகள் குறித்து அறிந்து கொள்கிறார்கள்.
அதன்பின்னரே தேர்வுக்கு படிக்க ஆரம்பிக்கிறார்கள்.வங்கித் தேர்வில் ஆங்கிலம், ரீசனிங், கணிதம், பொது அறிவு என 4 பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்தாக வேண்டும். தமிழக மாணவர்களில் கணிசமானோர் ஆங்கிலம், கணித பிரிவுகளில் சற்று பலவீனமாக இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அதிக மதிப்பெண் எடுக்க முடிந்தாலும் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க முடியாத நிலையிலும் வெற்றிவாய்ப்பை இழக்க நேரிடுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...