ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள்,
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், நிர்வாக பணிகளில் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து
உள்ளது.
இது தொடர்பான புகார்கள் குறித்து, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள்
விசாரணை நடத்தினர். இதையடுத்து, 'ஆசிரியர்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக்
கூடாது' என, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு
உள்ளது.
தேர்தல் பணி, மக்கள்தொகை
கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கு மட்டும்
விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், பள்ளி வாகனங்களில், ஒரு
ஆசிரியர் இருக்க வேண்டும் என்ற விதியையும், சி.பி.எஸ்.இ., நிர்வாகம்
திருத்தியுள்ளது.
அதன்படி, பள்ளி வாகனங்களில், உதவியாளர் ஒருவருடன், ஆசிரியருக்கு பதில், பெண் ஊழியர் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...