புதுடெல்லி, நாடு முழுவதும் பொதுமக்களின் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை
இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து
வரும் பாராளுமன்ற நிலைக்குழு அரசுக்கு அறிக்கை அளித்து வருகிறது. சமீபத்திய
அறிக்கையில் இந்த பணிகள் அனைத்தும் மிகவும் தொய்வடைந்து இருப்பதாக
நிலைக்குழு கவலை
வெளியிட்டு உள்ளது.குறிப்பாக மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம், பீகார், சத்தீஸ்கார், குஜராத், காஷ்மீர், மணிப்பூர், கர்நாடகா, மேகாலயா, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த பணி பெரும்பாலும் தொடங்கவே இல்லை என கண்டறியப்பட்டு உள்ளது. பெரிய மாநிலங்களான மத்திய பிரதேசத்தில் 18 சதவீதத்துக்கும் குறைவாகவும், மராட்டியம் மற்றும் ராஜஸ்தானில் 1 சதவீத அளவுக்கே இந்த பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.சில மாநிலங்களில் ஆதார் அட்டையே இன்னும் வினியோகிக்கப்படாத நிலை இருப்பதுடன், பல மாநிலங்களில் ரேஷன் கார்டு பணிகளிலேயே பல குழப்பங்கள் நிலவுவதாகவும் நிலைக்குழு கூறியுள்ளது. எனவே இந்த பணிகளை துரிதப்படுத்துமாறு உணவு மற்றும் வழங்கல் துறையை நிலைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...