தஞ்சாவூர்:மாநில அரசு ஊழியர்களுக்கு, 'செக்' வைக்கும் விதமாக, -தஞ்சாவூர்
தொகுதியில், மத்திய அரசு ஊழியர் களை கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு
உள்ளன.
தஞ்சாவூர் சட்டசபை தொகுதி தேர்தல், 19ம் தேதி நடக்கிறது.
தேர்தலுக்கு, ஐந்து நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள்
பலப்படுத்தப்பட்டுஉள்ளன; வாகன சோதனையும் தீவிரமாக நடந்து வருகிறது.
மாநில அரசு ஊழியர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுவில் இருந்தனர். தி.மு.க., -
அ.தி.மு.க., கட்சிகள், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவில் ஈடுபடும்
எனவும், மாநில அரசு ஊழியர்கள், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவர் எனவும்,
தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, தேர்தல் கமிஷன், மத்திய அரசு ஊழியர்களை கொண்ட, 30 புதிய
பறக்கும் படைகளை உருவாக்கியுள்ளது. இவர்கள், எட்டு மணி நேரத்திற்கு, 10
குழுக்கள் வீதம், தொடர்ந்து, 24 மணி நேரமும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு
வருகின்றனர்.மேலும், நிலையான கண்காணிப்பு குழுவிலும், மாநில அரசு
ஊழியர்களுக்கு பதிலாக, மத்திய அரசு ஊழியர்கள், மத்திய ஆயுதப்படை போலீசார்,
நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...