கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், முதுகலை பயோ -
கெமிஸ்ட்ரி பாடப்பிரிவுக்கு மூன்று இடங்களை ஒதுக்கி, இந்திய மருத்துவக்
கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்று ஆய்வுகளுக்கு பின், சமீபத்தில் கூடுதலாக, 14 சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை டீன் எட்வின் ஜோ கூறுகையில்,
”மருந்தியியல், பயோ - கெமிஸ்ட்ரி, உளவியியல், தடய அறிவியல் உள்ளிட்ட
பிரிவுகளுக்கு, 20 சீட்கள் வேண்டி, இந்திய மருத்துவ கவுன்சிலிடம் மருத்துவ
கல்லூரி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
வரும் கல்வியாண்டில், புதியதாக முதுநிலையில் எம்.டி., பயோ -
கெமிஸ்ட்ரி படிப்புக்கு மூன்று சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும், 2017 -
18 கல்வியாண்டில் எம்.டி., பயோ - கெமிஸ்ட்ரி படிப்பில் சேர்க்கை நடக்கும்,”
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...