கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான
விளையாட்டுப் போட்டிகளில் நேற்று கோலாகலமாக நடந்தது.
இதில், பள்ளி
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் விளையாடினர்.மாவட்ட பள்ளிக்கல்வி துறை,
அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் மாற்றத்திறனாளி
மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நேற்று
நடந்தன.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் துவக்கி வைத்தார். பள்ளி
மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதி ஏந்தி வந்தனர். ரோட்டரி சங்க தலைவர் ரத்தினம்,
கமலேஷ் ரகேஜா, திட்ட தலைவர் சுரேஷ்குமார், துணை தலைவர் சுவாமிநாதன்,
செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போட்டிகளில் முதல் இரண்டு
இடங்களை வென்றவர்கள்:
பெண்கள்:14 வயது, டென்னிஸ் பந்து எறிதல்: சுப்புலட்சுமி, பிரியங்கா,
பூஜா.14 வயது - 50 மீ., ஓட்டம்: யுவபிரியா, குன்னத்துார்புதுார், அரசு
பள்ளி, ரஞ்சனி, சவுமியா செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி.17வயது, டென்னில்
பந்து எறிதல்:மாலதி, திவான்சாபுதுார் பள்ளி பொள்ளாச்சி; ஜெயஸ்ரீ,
கிருஷ்ணம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாரணி, சி.எஸ்.ஐ., பெண்கள்
மேல்நிலைப்பள்ளி.17 வயது, 50 மீ.,பி.எஸ்.ஜி., கன்யா குருகுலம், மேனகா
தேவி.19 வயது,எஸ்தர் ரூபி, வித்யா, ராமகிருஷ்ணாபுரம், மாநகராட்சி பெண்கள்
மேல்நிலைப்பள்ளி; திலகவதி, காளப்பட்டி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.19
வயது, நின்றபடி நீளம் தாண்டுதல்: சவுந்தர்யா; ஸ்ரீதேவி, மாநகராட்சி
மேல்நிலைப்பள்ளி, செல்வபுரம்; பிரியங்கா.19 வயது, 50 மீ.,
ஓட்டப்பந்தயம்:தர்ஷிணி, சி.சி.எம்.ஏ., ராஜவீதி, பிரியா, சி.எஸ்.ஐ., பெண்கள்
மேல்நிலைப்பள்ளி, கவுசல்யா, காரமடை, அரசு மேல்நிலைப்பள்ளி.ஆண்கள்:14 வயது -
நின்றபடி, நீளம் தாண்டுதல்ஆனந்த்ராஜ்; பி.என்.புதுார், மாநகராட்சி
மேல்நிலைப்பள்ளி, சந்தோஷ்; தம்பு, தம்பு மேல்நிலைப்பள்ளி.14 வயது - 50 மீ.,
ஓட்டப்பந்தயம்: ரங்கராஜ், இடையர்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி;
சக்திவேல், சி.எம்.எஸ்., மேல்நிலைப்பள்ளி, நீலிக்கோணாம்பாளையம்;
மதன்குமார், இடிகரை, அரசு மேல்நிலைப்பள்ளி.17 வயது - நின்றபடிநீளம்
தாண்டுதல்: ஜெபர்சன், ஜான்சன், செயிண்ட் ஆண்டனி மேல்நிலைப்பள்ளி;
ஸ்ரீஹரி.17 வயது - 50 மீ., ஓட்டம்: சூரியபிரகாஷ், தேவாங்க மேல்நிலைப்பள்ளி,
இந்திரஜித், சேத்துமடை, முகில்வேந்தன், புலியகுளம் அரசு பள்ளி.19 வயது -
நின்றபடி, நீளம் தாண்டுதல்(காது கேளாதோர்)விக்னேஷ், மிதுன்,
டி.என்.ஜி.ஆர்., மேல்நிலைப்பள்ளி; பாலகுமார், முத்துக்கவுண்டன்புதுார் அரசு
மேல்நிலைப்பள்ளி.19 வயது - நின்றபடி, நீளம் தாண்டுதல்: சந்தோஸ்குமார்,
சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; அஜீத்குமார், செயிண்ட் மைக்கெல்ஸ்
மேல்நிலைப்பள்ளி; இயசாக், அரசு மேல்நிலைப்பள்ளி, குனியமுத்துார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...