Home »
» ஒரே நாளில் இரு பணிகள் குழப்பத்தில் ஆசிரியர்கள்.
மதுரை மாவட்டத்தில் நவ.,6ல் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பும்,
குரூப் 4 தேர்வு பணியும் ஒரே நாளில் பங்கேற்க அழைப்பு கடிதம்
அனுப்பப்பட்டுள்ளதால் குழப்பத்தில் உள்ளனர்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் நவ.,19ல் நடக்கிறது. இதற்காக
ஆசிரியர்களுக்கு நவ.,6ல் வேலம்மாள் பொறியியல் கல்லுாரியில் தேர்தல் பயிற்சி
வகுப்பில் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு பணியில் பங்கேற்கவும் மையங்கள்
குறிப்பிட்டு ஆசிரியர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில்
எதில் பங்கேற்க வேண்டும் என குழப்பத்தில் உள்ளனர். தமிழாசிரியர் கழக மாவட்ட
செயலாளர் ஜெயக்கொடி கூறுகையில், "மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை
இதுகுறித்து ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். குரூப் 4 தேர்வுப்
பணியில் ஈடுபடும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட அந்த ஆசிரியர்களுக்கு தேர்தல்
பயிற்சி வகுப்பு மற்றொரு நாளில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்," என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...