தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் செயல்படுத்தப்படும்,
இரண்டு திட்டங்களை இணைத்து, 'திறமையாளர்களை கண்டறியும் முகாம்' என்ற புதிய
திட்டத்தை, நடப்பாண்டு முதல், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த, அரசு
உத்தரவிட்டுள்ளது.
புதிய திட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும், 14
வயதிற்கு உட்பட்ட, தலா, 10 சிறுவர், 10 சிறுமியரை தேர்வு செய்து, ஆறு
மாதங்கள் பயிற்சி அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, வார இறுதி
பயிற்சி திட்டம் மற்றும் தின பயிற்சி திட்டத்திற்கு ஒதுக்கப்படும், 81
லட்சம் ரூபாயை, புதிய திட்டத்திற்கு ஒதுக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, விளையாட்டுத் துறை செயலர் ராஜேந்திரகுமார் பிறப்பித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...