திண்டுக்கல் மாவட்டம் பழநி உழவர் சந்தைக்கு ஆயக்குடி, கணக்கன்பட்டி, பாலசமுத்திரம் உள்பட பகுதிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு'
தினமும் 12 டன்முதல் 15டன் வரை காய்கறிகள்
விற்பனை ஆகிறது.'ஸ்மார்ட் கார்டு' அறிமுகம்: தமிழ்நாடு வேளாண் இணை இயக்குனர் (வணிகம்) இளங்கோவன் பழநிஉழவர் சந்தையில் விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். பின், தமிழகத்தில் முதன்முறையாக பழநி உழவர்சந்தை வரும் விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு'களை இணை இயக்குனர் இளங்கோவன் வழங்கினார்.
3 மாதங்களுக்கு ஒருமுறை
நிர்வாக அலுவலர் காளிமுத்து கூறுகையில்,“ ஸ்மார்ட் கார்டில் விவசாயிகளின்முகவரி, கைரேகை அவரது நிலம் எவ்வளவு, என்ன காய்கறிகள் பயிரிட்டுள்ளார் போன்ற விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காய்கறிகள் புதிதாக சாகுபடி செய்தால் விபரங்களை மாற்றி 3 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.
இதன்அடுத்த கட்டமாக 'ஸ்மார்ட் கார்டு' பதிவுகள் விரைவில் உயர் அதிகாரிகளின் கம்ப்யூட்டர் சர்வரில் இணைக்கப்படும். இதில் சென்னை வேளாண் இயக்குனர், மாவட்ட அலுவலக அதிகாரிகள் விவசாயிகளின் வருகை பதிவு, காய்கறி வரத்து சந்தை விலை விபரங்களை
நேரடியாக தெரிந்து கொள்வர்.” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...