சென்னை: மின் கட்டண மையங்களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள்
வாங்கப்படாததால், அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்த, மின் வாரியம், கூடுதல்
அவகாசம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு: மத்திய
அரசின் அறிவிப்பில், மின் வாரியம் வராததால், 500, 1,000 ரூபாய் நோட்டுகள்,
வாங்கப்பட மாட்டாது. தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின் கட்டணம் செலுத்தும்
கடைசி நாள், நவ., 9 முதல், 30 வரை என இருப்பின், அந்த இறுதி நாள், ஒரு
வாரத்துக்கு சிறப்பு சலுகையாக நீட்டிக்கப்படுகிறது.
அதாவது, அபராதம் இன்றி, மின் கட்டணம் செலுத்த கடைசி நாள், நவ., 9 என
இருந்தால், அது, 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நவ., 30 கடைசி நாள்
இருந்தால், டிச., 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மாத மின்
பட்டியலுக்கு, பணம் செலுத்த தவறும் தாழ்வழுத்த நுகர்வோர், அதாவது, நவ., 8
அன்று கடைசி நாளாக இருப்பவர்கள், 16ம் தேதி வரை கட்டணம் செலுத்த
அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு, 8ம் தேதி வரை, தாமத கட்டணம், மறு இணைப்பு
கட்டணம் வசூலிக்கப்படும்.
நவ., 9 முதல், செலுத்தவிருக்கும் ஒப்பந்த புள்ளிகளுக்கான வைப்பு தொகை
அல்லது இதர வகையில் பெறவிருக்கும் தொகை, 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக
வசூலிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...