தெலுங்கானாவில், அரசு பணியாளர் தேர்வு எழுதுவோர், வாட்ச், ஷூ
அணிந்து செல்லவும், பர்ஸ் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா
ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, விரைவில் அரசு பணியாளர் தேர்வு
நடக்கவுள்ளது; எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், இந்த தேர்வை எழுத
உள்ளனர்.
தேர்வு எழுதுவோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து, மாநில
அரசு பணியாளர் தேர்வாணையம், வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்வு அறைக்கு, மொபைல்
போன், கால்குலேட்டர் உட்பட, மின்னணு பொருட்களை எடுத்து வரக் கூடாது;
வாட்ச், ஷூ அணிந்து வரவும், பர்ஸ் எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டு
உள்ளது; உடலில், 'டாட்டூ' வரைந்திருக்க கூடாது. பெண்கள், தங்க நகைகள்
அணிந்து வரவும், கைகளில் மருதாணி வைத்து வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...