வீணாகும் அட்டைகளில் உருவாக்கப்பட்டுள்ள விலங்குகளின் உருவங்கள். மாணவர்கள் அட்டைகளில் உருவாக்கிய முப்பரிமாண உருவங்கள்.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை யொட்டி
உள்ளது தேவராயபுரம் கிராமம். இங்கு உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில்
அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான மாணவர்கள் படிக்
கின்றனர். இவர்கள் பெரும்பாலும், பின்தங்கிய பொருளாதாரச் சூழ லில் இருந்து
வருபவர்கள். அத னால், தனியார் பள்ளி மாணவர் களைப்போல, அதிக செலவு செய்து
தனித்திறமைகளை இவர்களால் வளர்க்க முடியாது. இதைக் கருத் தில்கொண்டுள்ள
பள்ளி நிர்வாகம், படிப்புடன், விளையாட்டு, தனித் திறன் வளர்க்கும் பல
பயிற்சிகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக,
ஓவியம் சார்ந்த பயிற்சிகள் மூல மாக மாணவர்களுக்கு கல்வி மீது நாட்டத்தை
ஏற்படுத்த மேற் கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை அனைவருமே பாராட்டுகின்றனர்.
சாதாரண ஓவியப் பயிற்சியாக தொடங்கி, நுணுக்கங்களை வெளிப்
படுத்தும் ஓவியங்களை உருவாக்கு வது வரை இங்கு பல பயிற்சிகள்
அளிக்கப்படுகின்றன. பள்ளி வளாகத்தில் வீணாகக் குவியும் காகிதங்களால் ஓவிய
உருவங்கள் தயாரித்தும், 150-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை வரைந்து,
வண்ணம் தீட்டி உயிர்ப்புடன் காட்சிப்படுத்தி இந்த மாணவர்கள் அசத்தினர்.
அடுத்தகட்டமாக, வீணா கும் அட்டைகளில் விலங்குகளுக்கு புதிய வடிவம் கொடுத்து
வருகிறார்கள்.
வீடுகளிலும், பள்ளியிலும் கிடைக்கும் அட்டைகளை விலங்கு களின்
வடிவத்துக்கு ஏற்ப வெட்டி, வண்ணம் தீட்டி அழகுபடுத்து கின்றனர். மேலும்,
களிமண்ணால் செய்யப்படுவதைப் போன்ற விலங்குகளின் முப்பரிமாண (3டி)
உருவங்களையும் அட்டைகள் மூலமாகவே வடிவமைக்கத் தொடங்கி உள்ளனர். மாணவர்
களின் ஓவியம் சார்ந்த நுண்கலை முயற்சி ஆசிரியர்களையும், பெற் றோர்களையும்
ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கல்விக்கும் உதவும்
ஓவிய ஆசிரியர் வீ.ராஜகோபால் கூறும்போது, ‘‘வீணாகும் பொருளை
கலைப் பொருளாக்கும் உத்தி, சாதாரணமான செயல் அல்ல. பொருளாதாரத்தில்
பின்தங்கி யுள்ள மாணவர்கள் என்பதால், எளிமையாக அவர்களது திறமை களை
வெளிக்கொணர வேண்டியது அவசியம். ‘புராஜெக்ட்’ என்ற பெய ரில் விற்கப்படும்
பொருட்களை வாங்கி வந்து காட்சிக்கு வைக் கும் இந்த காலகட்டத்தில், வீணா
கும் அட்டைகள், திருமண பத் திரிகை அட்டைகளில் விலங்கு களின் வடிவங்களை
உருவாக்கும் மாணவர்கள் முயற்சி அசாத்திய மானது.
அட்டைகள் விதவிதமான வண்ணங்களையும், எழுத்து களையும்
கொண்டிருப்பதால் வண்ணம் தீட்டாமல் புதுமையாக விட்டுள்ளனர். அதேபோல களி
மண்ணால் செய்யப்படும் முப்பரி மாண உருவத்தை அட்டை களாலேயே உருவாக்கி
இருக்கி றார்கள். ‘திறமையாளன் கையில் எது கிடைத்தாலும் அது கலைப் பொருளாக
மாறும்’ என்பது இந்த மாணவர்களுக்கு பொருந்துகிறது.
ஓவிய ஆசிரியர் ராஜகோபால்
வரைகலை, அளவீடுகள் அடிப்படையில் கட்டாயப்படுத்தாமல் வரையவும்,
முழுமை அடையாத அரூப உருவங்களை உருவாக்கவும் கற்றுக் கொடுக்கிறோம். குறைகள்
வந்தால் மனம் சோர்வடையும் என்ப தால் உருவ வடிவம் கிடைத் தாலே போதும் என
கூறி ஊக்கப் படுத்துகிறோம்.
இதுபோன்ற ஓவியப் பயிற்சி களால், மாணவர்களின் மனம் ஒருநிலைப்பட்டு கவனம் அதிகமாகிறது; அது படிப்புக்கும் உதவுகிறது’’ என்றார்.
தலைமை ஆசிரியர் திப்பன் கூறும்போது, “கோவையில் நடக்கும் பல
ஓவியப் போட்டிகளில் எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் மிக எளிதாக பரிசுகளை
வென்று வருகிறார்கள். அதற்குக் காரணம் இங்கு கொடுக்கப்படும் பயிற்சியே.
இதுபோன்ற தனித்திறன் வளர்ப்புப் பயிற்சிகளால் மாணவர்களின் கற்றல் திறனிலும்
முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது’’ என்றார்.
ஏழை மாணவர்களிடம் மறைந் திருக்கும் தனித் திறமைளைப் போலவே,
வீணான அட்டைகளில் அவர்கள் உருவாக்கிய விலங்கு வடிவங்களும் உயிர்ப்புடன்
பிரம் மாண்டமாகக் காட்சியளிக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...