தனியார்
பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள், ஆசிரியர்களின் சம்பளத்தை வங்கியில்
செலுத்தாமல், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக கொடுத்துள்ள தகவல்
வெளியாகி உள்ளது.
இது குறித்து, தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் கூறியதாவது: ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கணக்குகள் துவக்கப்பட்டு, மாதச் சம்பளத்தை வங்கியில் செலுத்தி விடுவர். 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்த அடுத்த நாள் முதல், கல்வி கட்டணமாக, பழைய நோட்டுகளை வாங்க மறுத்து விட்டனர்.
ஆனால், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளத்தை வங்கியில் செலுத்தாமல், இம்மாதம் பணமாக கையில் கொடுத்துள்ளனர். அதை வங்கியில் மாற்ற, 'பர்மிஷன்' அளித்தனர். இதன் மூலம், பல கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை, கல்வி நிறுவனங்கள், வெள்ளையாக மாற்றியுள்ளன. டிச., 30 வரை, பழைய நோட்டுகளை வங்கியில் செலுத்தும் வசதியுள்ளதால், அடுத்த மாத சம்பளமும், பழைய நோட்டுகளாகவே வழங்கப்படும் என, தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தனியார் பள்ளிகள்.கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கலில் மாணவர்களின் பணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த உத்தரவிடவேண்டும். பணமாக எக்காரனத்தைக் கொண்டும் வாங்கக் கூடாது என் உத்தரவிடவேண்டும்.
ReplyDeletevery good idea mam its to immediately action RBI and Modi Sir
Deleteதனியார் பள்ளிகள்.கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கலில் மாணவர்களின் பணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த உத்தரவிடவேண்டும். பணமாக எக்காரனத்தைக் கொண்டும் வாங்கக் கூடாது என் உத்தரவிடவேண்டும்.
ReplyDelete