புதுடில்லி : 'பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்பு
பணிக்காக, ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும்,
மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின்
பாதுகாப்புக்கு, தனியாக பெண் காவலர்கள் அல்லது உதவியாளர்களையே பயன்படுத்த
வேண்டும்.
கடும் நடவடிக்கை :
மக்கள் கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள், தேர்தல் போன்ற பணிகளைத்
தவிர, பள்ளியின் மற்ற நிர்வாகப் பணிகளுக்கு ஆசிரியைகளை பயன்படுத்தக்
கூடாது.இதை பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இதை மீறும்
பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...