அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும்’ என, உடற்கல்வி ஆசிரியர் கழகங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், செட்டி மாரம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், மாவட்ட உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கழகங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் மாதேஷ் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் விமலன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் மாதையன் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உடற்கல்வியை கட்டாய பாடம் ஆக்கப்பட்ட பின், அதற்கான பாட புத்தகங்கள் வழங்கப்படவில்லை.
எனவே, பாட புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் கழங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று, உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர் ஊக்க ஊதியம் உயர்த்தி வழங்கியமைக்காக தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துகொள்வது என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த உடற்கல்வி இயக்குனர்கள் பலர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...