சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனம்
கோரியுள்ள சிவில் மேற்பார்வையாளர், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்ட பணிகளுக்கு
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் வரும் 16,17 தேதிகளில்
நேர்முகத்தேர்வு நடக்கிறது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில், ''சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனத்தின் உள்வடிவமைப்பு
பிரிவுக்கு, டிப்ளமோ தேர்ச்சி பெற்ற சிவில் மேற்பார்வையாளர்கள்
தேவைப்படுகின்றனர். 30 முதல் 35 வயதுக்குட்பட்ட 3 ஆண்டு பணி அனுபவம்
பெற்றவர்களாக இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.63 ஆயிரத்து 875 முதல்,
ரூ.82 ஆயிரத்து 125 வரை அளிக்கப்படும்.
மேலும், 2 ஆண்டு ஐடிஐ சான்றிதழ் பெற்ற
எலெக்ட்ரீஷியன்கள், எச்விஏசி டெக்னீஷியன்கள், அலங்கார பொருட்கள் மற்றும்
விற்பனையகத்துக்கு பொருத்துதல் தொடர்பான பணிகளில் அனுபவம் உள்ள ஸ்டீல்
பேப்ரிகேட்டர்கள் தேவைப்படுகின்றனர்.
இதில் எலெக்ட்ரீஷியன்களுக்கு மாத ஊதியம்
ரூ.36 ஆயிரத்து 500 முதல் ரூ.40 ஆயிரத்து 150 வரை, ஏசி டெக்னீஷியன்களுக்கு
ரூ.27 ஆயிரத்து 375 முதல் ரூ.32 ஆயிரத்து 850 வரையும், ஸ்டீல்
பேப்ரிகேட்டர்களுக்கு ரூ.23 ஆயிரத்து 725 முதல் ரூ.27 ஆயிரத்து 375 வரையும்
வழங்கப்படும்.
மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ
சான்றிதழ்களுடன் கடைகள்,சில்லறை விற்பனையகங்கள், உணவகங்கள் ஆகியவற்றில்
உள் அலங்கார பொருத்துதல் வேலைகளில் 3 ஆண்டு பணி அனுபவம் உள்ள ஜிப்சம்,
மரத்தச்சர்கள், மர பெயின்டர்கள், சுவர், கான்கிரீட் பெயின்டர்கள், டைல்ஸ்
கொத்தனார்களும் தேவைப்படுகின்றனர். இவர்களுக்கு ரூ.23 ஆயிரத்து 725 முதல்
ரூ.27 ஆயிரத்து 325 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இலவச இருப்பிடம் மற்றம் அந்நாட்டின் சட்டதிட்டத்துக்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.
தகுதியுடையவர்கள் தங்கள் சுய விவரம் அடங்கிய
விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் வெள்ளை நிற
பின்னணியில் எடுக்கப்பட்ட 3 புகைப்படத்துடன் நவம்பர் 16,17 தேதிகளில்,
கிண்டி, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள
தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் நடக்கும்
நேர்முகத்தேர்வுக்கு காலை 9 மணிக்குள் நேரில் வரவேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...