சேலம், பெரியார் பல்கலையில், 2001ல்,தொலைதூர கல்வி மையமான பிரைடு துவங்கப்பட்டது.
அதில், இளங்கலை, முதுகலை, டிப்ளமோ,சான்றிதழ் உள்ளிட்ட, 150 படிப்புகள் வழங்கப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 188, அண்டை மாநிலங்களில், 105,அண்டை நாடுகளில், மூன்று என, 295 படிப்பு மையங்கள் செயல்படுகின்றன.
எச்சரிக்கை:
அதில், அண்டை நாடுகள் மற்றும் மாநிலங்களில் உள்ள படிப்பு மையங்களை நடத்தக்கூடாது என,யு.ஜி.சி., உத்தரவிட்டது.
மேலும், விதிக்கு மாறாக, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, படிப்புகளை வழங்கியதால், பெரியார் பல்கலை தொலைதூர படிப்புகளில், மாணவர்கள் சேர வேண்டாம் என, சில மாதங்களுக்கு முன், யு.ஜி.சி.,எச்சரித்தது.
ஆதரவு:
இதனால், பெரியார் பல்கலை, தொலைதூர கல்வியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. பல்கலை சார்பில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், பல்கலைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனால், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது என, பல்கலை அறிவித்துள்ளது.
தொடரலாம்:
பிரைடு இயக்குனர் பாலகுருநாதன் கூறுகையில், மற்ற பல்கலைகளில் பின்பற்றும் விதிமுறைப்படி,பெரியார் பல்கலையில், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடரலாம் என, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பெரியார் பல்கலை, தொலைநிலை கல்வி மையத்தில், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது, என்றார். தொலைநிலை கல்வியில் மாணவர் சேர்க்கை நடத்த, பல்கலை மானியக்குழு விதித்த தடைக்கு, பெரியார் பல்கலை, நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றதால், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...