நாளை முதல், பெட்ரோல் பங்க் வேலை நேரத்தை
குறைக்க, உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகம் மற்றும்
புதுச்சேரியில், 4,750 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. ஒரு பங்க்கில்
மாதம்தோறும் சராசரியாக, 1.70 லட்சம் லிட்டர் பெட்ரோல், டீசல்
விற்பனையாகிறது. டீலர் கமிஷனை உயர்த்தி தருமாறு, பெட்ரோல் பங்க்
உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை, மத்திய
அரசு அமைத்த கமிட்டி பரிந்துரை அளித்தும், எண்ணெய் நிறுவனங்கள்
அமல்படுத்தவில்லை.
இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், பல கட்ட போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி, கடந்த மாதம், 19, 26ல் இரவு, 7:00 முதல், 7:15 வரை, பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. நேற்று, பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்தினர்.
இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பு தலைவர், முரளி கூறியதாவது:டீலர் கமிஷன் தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், எண்ணெய் நிறுவனங்களிடம், நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில், கமிஷனை உயர்த்தி தர ஒப்புக் கொள்ளாவிட்டால், 5ம் தேதியில் இருந்து, காலை, 9:00 முதல், மாலை, 6:00 வரை மட்டும் பங்க் திறக்கப்படும். பின், வங்கிகள் போல், பெட்ரோல் பங்க்குகளுக்கும், வார விடுமுறை விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...