கல்வியில் தனியார்மயத்தை ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:
டாக்டர் என்றாலே அதிகம் பணம் வாங்குவார் என்ற சந்தேகம்
உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த டாக்டர்கள் மீது அந்த சந்தேகம்
இருப்பதில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்த டாக்டர்கள் மீது
அந்த சந்தேகம் உள்ளது. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தனியார் கல்லூரியில்
படிப்பவர்கள் பிறகு எப்படி பணத்தை எடுக்க முடியும். கல்வி வணிகமாக மாறி
விட்டது.
நீட் தேர்வு கறுப்பு பணத்தை வெள்ளையாக்க உதவுகிறது.
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு வேண்டாம். மருத்துவம், பொறியியல்
படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படை யில் மாணவர் சேர்க்கை நடத்த
வேண்டும். ஒட்டுமொத்த கல்வியிலும் தனியார்மயத்தை ஒழிக்க வேண்டும். தனியார்
கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
இவ்வாறு ஹரிபரந்தாமன் தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் பேசுகையில், “நீட்
தேர்வு பிரச்சினையில் பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தீர்வு காண
முடியாது. நீட் பற்றி நேரம் கிடைக்கும் போது நாடாளுமன்றத்தில் பேசுகிறோம்”
என்றார்.
இந்த கருத்தரங்கில் தமிழக மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.வி.சுரேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...