Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இனி வருமான வரி கிடையாது ??? மாேடியின் அடுத்தடுத்த அதிரடி..!!!

     வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பாெது பட்ஜெட்டில் வருமான வரி ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன. 
 
பழைய, 500 - - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, என அதிரடி அறிவிப்பால் கறுப்புப் பணத்தை வெளிக்காெண்டு வர முடியும் என பிரதமர் மோடியின் எண்ணமாக இருந்ததுஇந்த திட்டத்தால் பொது மக்களுக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இதைப் பெரிதாக்கி அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டன.

     நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, எதையும் செய்யத் தயாராக இருப்பதாக மோடி திட்டவட்டமாக தொிவித்துளளாார். சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது, 'இன்னும் பல திட்டங்கள் என் மனதில் உள்ளன' என, சொல்லியிருக்கிறார்.

அது என்ன புது திட்டம்? அரசியல்வாதிகள், அதிகாரிகள் வட்டாரங்களில் கூறப்படுவது என்னவென்றால், வரும் பிப்ரவரி மாதம் அரசு சமர்ப்பிக்க உள்ள மத்திய பட்ஜெட்டில், வருமான வரியை ரத்து செய்யப்பாேவதாகவும்அதற்கு பதிலாக இரண்டு வரிகள் அமலில் வரப்பாேவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திட்டங்கள் அமலில் வந்தவுடன், வங்கி மூலமாக வாங்கும் பொருட்களுக்கு வரி.- இதை, 'பேங்கிங் டிரான் சாக்சன்' வரி என்கின்றனர். இன்னொன்று: சரக்கு மற்றும் சேவை வரி. இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால், பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்பதோடு, வருமான வரி ஒழிந்தால் நடுத்தர வகுப்பினர் மிக சந்தோஷப்படுவர் என்பதே பிரதமரின் திட்டமாக உள்ளது என கூறப்படுகிறது.

click here- to view the source





1 Comments:

  1. தேர்தலின் போது 5லட்சரூபாய்வரை வருமானவரி இல்லை என்று புரளியைக் கிளப்பியது போல் இப்பொழுது இது!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive