சென்னை: 'பிஎச்.டி., பட்டம் பெற, நவ., 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என,
சென்னை பல்கலை அறிவித்து உள்ளது. சென்னை பல்கலையின், 159ம் ஆண்டு
பட்டமளிப்பு விழா, டிச., 1ம் தேதி, பல்கலை வளாகத்தில் நடக்கிறது.
இதில், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்தோர் பட்டம்
பெற, நவ., 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, பல்கலையின் தேர்வு
கட்டுப்பாட்டு அதிகாரி, திருமகன் அறிவித்துள்ளார். பல்கலையின்,
www.unom.ac.in இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பல்கலையின் விசாரணை மைய கவுன்டரிலும், 25 ரூபாய் கொடுத்து பெற்றுக்
கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...