அடுத்த ஆண்டுக்கான, அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த அரசாணை
வெளியிடப்படாததால், காலண்டர் அச்சிடுவோர் அதிருப்தி
அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும், தமிழக அரசு விடுமுறை நாட்கள் குறித்த விபரம்,
அரசாணையாக வெளியிடப்படும். அதன் அடிப்படையில், காலண்டர் தயாரிப்போர்,
காலண்டரில் அரசு விடுமுறை நாட்களை குறிப்பர்.
கடந்த ஆண்டு, அரசு விடுமுறை நாட்கள் குறித்த விபரம்
வெளியாவதில் தாமதமானது. ஏமாற்றமடைந்த, காலண்டர் தயாரிப்போர், பொதுவான
விடுமுறை நாட்களை கணக்கிட்டு, காலண்டரை அச்சிட்டனர்.'இந்த ஆண்டும் தாமதம்
ஏற்படாமல், 2017க்கான, அரசு விடுமுறை நாட்கள் குறித்த அரசாணையை, விரைவாக
வெளியிட வேண்டும்' என, காலண்டர் தயாரிப்பாளர்கள், அரசுக்கு கோரிக்கை
விடுத்தனர். நவம்பர் மாதமாகியும், அரசாணை வெளியிடப்படவில்லை. இதுகுறித்து,
பொதுத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதல்வர் அலுவலகத்திற்கு கோப்பு
அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், அரசாணை வெளியிடப்படும்'
என்றனர். விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாததால், காலண்டர்
அச்சிட முடியாமல், காலண்டர் தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.அரசு
பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும், காலண்டர் அச்சடிக்க
முடியாமலும், எவ்வளவு நாள் காத்திருப்பது என தெரியாமலும் தவித்து
வருகின்றன.
அம்மா அவர்கள் அறிவித்த 9 மாதமாக உயர்த்தப்பட்ட மகப்பேறு விடுப்பிற்கான அரசாணையை உடனடியாக வெளியிட்டால் என்னைப்போல் 6 மாத மகப்பேறு விடுப்பு முடியும் தருவாயில் உள்ளவர்களுக்கு தங்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டவும் பராமரிக்கவும்
ReplyDeleteமிகவும் பயனுள்ளதாக இருக்கும் . தமிழக அரசு ஆவண செய்யுமாறு வேண்டுகிறன்.