இந்தியாவின் கிராமப்புறங்களில் வைபை வசதியை வழங்கிட பேஸ்புக் நிறுவனம்
புதிய திட்டம் தீட்டியுள்ளது.
வைபை வசதிநம்பர் ஒன் சமூக வலைதளமாக திகழும் பேஸ்புக், இந்தியாவின் கிராமப்புறங்களில் தரமான வைபை வசதியை வழங்கிட முடிவெடுத்துள்ளது. பேஸ்புக் அதற்கான சோதனை முயற்சிகளில் தற்போது இறங்கியுள்ளது. 'எக்ஸ்பிரஸ் வைபை (Express Wi-Fi) என இந்த திட்டத்துக்கு பெயரிட்டுள்ள பேஸ்புக், இதற்காக வைபை வசதி வழங்கும் பிற தொலைத்தொடர்பு மற்றும் இன்டர்நெட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மேலும், இந்த சேவைக்காக சிறிய பறக்கும் லேசர் ரக விமானங்களை வைத்தும் பேஸ்புக் சோதனை நடத்தி வருகிறது. தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கும் இந்த எக்ஸ்பிரஸ் வைபை வசதி, நடைமுறைக்கு வந்தால் பேஸ்புக்கின் பிரத்தியேக அப்ளிகேஷன் மூலம் இதனைப் பெற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து Internet.Org. என்ற பெயரில் இன்டர்நெட் வசதியை பேஸ்புக் நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...