Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தடுமாறும் பிள்ளைகள் தடம் மாறாமல் இருக்க வேண்டுமா?

பெற்றோர்களின் உண்மையான சொத்து பிள்ளைகள் தான். அதனால் அவர்களின் எதிர்ப்பார்ப்பும் அலாதியானது.

தம்முடைய பிள்ளைகள் எல்லா விஷயங்களிலும் முன்னோடியாகவும் வெற்றியாளர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் கனவு. ஆனால் பெரும்பாலான குழந்தைகளால் சராசரி இலக்கையே எட்டிப் பிடிக்க முடிகிறது. இந்த சூழ்நிலையில் குழந்தைகளிடம் நாம் எதிர்ப்பார்ப்பது ‘மாற்றம்’ மட்டுமே. படிப்பில் மாற்றம், செயலில் மாற்றம், சொல்லில் மாற்றம், சிந்தனையில் மாற்றம், பழக்கங்களில் மாற்றம்…இப்படி எத்தனையோ மாற்றம் நம் குழந்தைகளை ‘மாற்றும்’ என எண்ணுகிறோம். பலருக்கு இந்த முயற்சியில் கிடைப்பதென்னவோ ‘ஏமாற்றம்’ மட்டுமே. இதனால் உந்தப்படும் குழந்தைகளுக்கு மிஞ்சுவது ‘தடுமாற்றம்’ என அவர்களுக்குப் புரிவதில்லை. அப்படியே ஏதேனும் மாற்றம் கிட்டினாலும் அதுநிலைப்பது சொற்ப காலமே. இதற்கு நிரந்திர தீர்வு தான் எனன்? அதற்குத் தேவை உருமாற்றம், அதிலும் பரிவுடன் கூடிய செயல் ஆக்கம்! குழந்தைகளிடம் இயல்பிலேயே வரவேண்டிய புரிதல்! அது தான் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான பெறுமதி!
ஏமாற்றமும் தடுமாற்றமும் எதனால்?
இதில் பெற்றோர்களின் நிலைப்பாடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
படிப்பே ஏறாவிட்டாலும், படிப்பில் ஆர்வமின்றி இருந்தாலும், படிப்பில் சுமாராக இருந்தாலும் நம்மிடம் உள்ள ஒரே தீர்வு ‘டியூஷன்’அன்றாட பழக்க வழக்கங்கள் முரண்பட்டிருப்பது. சத்தில்லாத தின்பண்டங்களின் பிரியர்களாக இருப்பது, டி.வி.கார்டூன், வீடியோ கேம்ஸ் பைத்தியங்களாக இருப்பது.கர்வத்துடனும், பொறாமையுடனும், பிடிவாத குணத்துடனும் இருப்பது.காழ்ப்புணர்ச்சியுடனும், மன தைரியமின்றியும் இருப்பது.நெகட்டிவ் சிந்தனையோடும், சோகத்துடனும், நிராசையுடனும் இருப்பது.
இக்காரணங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இந்த சவால்களை முறியடிப்பது எப்படி?
நிரந்திர தீர்வு என்பது அடிப்படையான மாற்றத்தை உள்நோக்குவது மற்றும் அனைத்து சவால்களையும் கருத்தில் கொள்வது. சுவற்றில் அடிக்கும் ஆணி ஏறவில்லை என்றால் அதை மேலும் பலம் கொண்டு அடிப்பதனால் வளையப்போவது என்னவோ ஆணி தான். மேலும் வலிக்கப்போவது என்னவோ நம் கைகள் தான். நம் வாழ்க்கையிலும் இதே நிலைமை தான். நாம் நம் பிள்ளைக்கு காட்டும் வழியும் அதனால் நமக்கு ஏற்படும் வலியும்! மாறாக அந்த ஆணியை கூர்மை படுத்தலாம், அடிக்கப்படும் இடத்தையும், தோதான சுத்தியையும் தேர்ந்தெடுக்கலாம். நம் மதிப்பிற்குரிய ஆசான் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கூற்று மெய்ப்பிக்கிறது ‘உன் வருங்காலத்தை உன்னால் மாற்ற இயலாது. ஆனால் உன் பழக்கங்களை மாற்று. அது உன் வருங்காலத்தை மாற்றிவிடும்’. நமது பழக்கங்கள் மாறினால் நம் வழக்கங்கள் மாறும். நமது வழக்கங்கள் மாறினால் நம் வளர்ச்சியின் தரம் மாறும்.
மனித செயல்பாட்டின் ஆணி வேர் ‘மூளை’. அதன் நலமே மன நலம், அதன் நலமே உடல் நலம். அதன் நலமே வாழ்வின் நலன். இந்த இயக்கம் பாதிப்படைந்தால் விளைவுகள் அபாயகரமானவை. பைத்தியம் பிடித்தல், ஞாபக மறதி. கோமா போன்ற நிலைகள் ஏற்படலாம். இந்த உறுப்பு மட்டுமே இடமாற்று அறுவை சிகிச்சைக்கு அப்பாற்பட்டதாக கருதப்படுகிறது. நம் இதயத்திற்கும், கிட்னிக்கும் தரும் முக்கியத்துவத்தை கூட மூளைக்கு கொடுப்பதில்லை. இதில் நல்ல மூளை, கெட்ட மூளை என்பதில்லை. செயல் திறனில் மட்டுமே மாறுபாடு.
சில பிள்ளைகள் மேதாவியாக இருப்பார்கள். ஆனால் நமக்கு வாய்த்ததோ இப்படி என்பது பலரின் மன உளைச்சல். இந்த நம்பிக்கையற்ற நிலையை மாற்ற முடியுமா? ஆம் முடியும். சாதாரண பிள்ளைகள் அசாதாரன அறிவாற்றலையும், சீரிய மன நிலையையும் பெற முடியும். ‘வாங்க…மேதாவியாகலாம்’ என அனைவரையும் பிள்ளைகளையும் பெற்றோர்களையும் வரவேற்கிறது பெங்களூரில் உள்ள ‘ஹாக் அகாடெமி’ எனும் கல்வி நிறுவனம். பல ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூறி மாணவர்களை (6 வயதிற்கு மேற்பட்டவர்கள்) பூரணமாக தேற்றிய சேவைக்காகவும், வெற்றிகரமான சமூக தொண்டிற்காகவும் 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற அனுபவமிக்க நிறுவனம் பயிற்சி மட்டுமின்றி தொழில் சம்பந்தமான வளர்ச்சிக்கும் வழி வகுக்கிறது ‘நீங்களும் பயிற்றுவிக்கலாம்’ சமூக வளர்ச்சியில் ஈடுபாடு உள்ளவர்கள் இதில் பங்கு கொள்ளலாம்.
தீர்வு பெறும் பயிலும் பிரச்னைகள் : கவனமின்மை, கவனக்குறைவு, கேட்கும் திறன், பார்க்கும் திறன், பழக்கங்களில் மாற்றம், மனத்தில் பதிய வைக்க எடுத்துக் கொள்ளும் நேரம், பதிய வைத்ததை தக்க வைக்கும் காலம், பதிய வைக்கும் முறை, பதிப்பை வெளிக்கொணரும் வேகமான மனத்திறன், மனக்கட்டுப்பாடு, சீரான மனநலன் மற்றும் அழகிய எழுத்து வடிவம்.
தீர்வு காணும் மன உளைச்சல்கள் : தடுமாற்றத்திற்கான அடிப்படையை ஆராய்வது, மனமாற்றத்தை கொணர்வது, மனத்தை திடப்படுத்துவது, அவர்களை ஒத்த சூழலை மேம்படுத்துவது, உயர்ந்த சிந்தனைகளை மனத்தில் விளைவிப்பது, மன சிதறல்களை தவிர்த்து தடம் மாறுவதை தடை செய்வது.
பிரச்னைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளைத் தேடித் தந்தால் நிச்சயம் எந்தப் பிள்ளைகளும் மேதாவியாகலாம்!
- மீர் சத்ருத்தீன்
தொடர்புக்கு 9448366139 / 9972015232




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive