பாரதியார் பல்கலையில், தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட, 76 பேராசிரியர்களின்
நியமனத்தை, இரு நாட்களில் ரத்து செய்ய, துணைவேந்தருக்கு அதிரடி உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலையில், உதவி பேராசிரியர், இணை
பேராசிரியர் மற்றும் பேராசிரியர்கள் பணிக்கு, 64 இடங்களும், உறுப்பு
கல்லுாரிகளில், 12 இடங்களும், காலியாக உள்ளன.
இவற்றை நிரப்ப, பல்கலை ஆகஸ்டில் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு, 1,976 பேர் விண்ணப்பித்தனர். தகுதியானோருக்கு, செப்., 8, அக்.,
26ல், நேர்காணல் நடந்தது. பின், நேர்காணலில் பெற்ற மதிப்பெண் படி, 76 பேர்
தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இந்த பணி நியமனத்தில், பல கோடி ரூபாய்
கைமாறி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. உயர் நீதிமன்றத்தில், மூன்று
வழக்குகள் தாக்கலாகியுள்ளன. பணி நியமனத்தை இறுதி செய்ய, 19ல் நடக்க இருந்த,
சிண்டிகேட் கூட்டம், முறைகேடு புகாரால் நடக்கவில்லை. 22ல், சென்னை, தலைமை
செயலகத்தில், இக்கூட்டம் அறிவிக்கப்பட்டது. பின், அதுவும், ரத்தான
நிலையில், தேர்வான, 76 பேருக்கு, உயர் கல்வி அமைச்சருக்கே தெரியாமல்,
பல்கலை, பணி நியமன கடிதம் வழங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதியிடம், உயர் கல்வி
அமைச்சர், அன்பழகன், நேற்று, இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினார். பல்கலை
விதிகள், உயர் கல்வி செயலகத்தின் உத்தரவுகளை மீறி, பணி நியமனம் நடந்துள்ளதா
என, விரிவாக விசாரித்தார். இதையடுத்து, இரு நாட்களில் அனைத்து
நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும் என, துணைவேந்தருக்கு, அமைச்சகம்
உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், என்ன செய்வது என தெரியாமல், பல்கலை
நிர்வாகம் குழப்பம் அடைந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...