'வங்கிகள்
மற்றும் ரிசர்வ் வங்கியிடம், போதிய பண இருப்பு உள்ளதால், செல்லாத ரூபாய்
நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின்,
நீட்டிக்கப்படாது' என, மத்திய அரசு கூறியுள்ளது.
ராஜ்யசபாவில் நேற்று, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம்
மேஹ்வால்எழுத்து மூலம் அளித்த பதில்:வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம்
போதிய ரூபாய் நோட்டுகள் இருப்புள்ளன. 100 ரூபாய்நோட்டுகளை வினியோகிக்கும்
பணிகள், ஏற்கனவே துவங்கிவிட்டன. வங்கிகளில் செல்லாத நோட்டுளை டிபாசிட்
செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின் நீட்டிக்கப்படாது.
சிறிய தொகை
கிராமப் பகுதிகளின் தேவைகளுக்காக, 100ரூபாய் போன்ற சிறிய தொகை நோட்டுகளை
சப்ளை செய்யும்படி, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த
பதிலில் கூறப்பட்டுள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார்
கங்வார், ராஜ்யசபாவில் அளித்த மற்றொரு பதிலில், ''வங்கிகளிலும்,
ஏ.டி.எம்.,களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவைக்கேற்ப அதிகரிக்கும்படி,
ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...