உறுதி அளித்த தேதியில், வீட்டை ஒப்படைக்காவிட்டால், கட்டு மான நிறுவனங்கள்,
10.9 சதவீத வட்டியுடன், பணத்தை திருப்பி தர வேண்டும்.
வீடு, மனை விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை
கட்டுப்படுத்த, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை, மத்திய அரசு
இயற்றியுள்ளது. முதற்கட்டமாக, யூனியன் பிரதேசங்களில், இந்த சட்ட விதிகள்
அமலாகியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட, பிற மாநிலங்களில், 2017 மே முதல், இந்த
விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இவை, நடைமுறைக்கு வந்தால், மத்திய அரசு இறுதி
செய்துள்ள வரைவின்படி, விற்பனை பத்திரங்கள் இருக்க வேண்டும்.
விதிமுறைகள் என்ன?
கட்டுமான நிறுவனம், விற்பனை பத்திரத்தில் குறிப்பிட்ட தேதியில், பணிகளை முடித்து, பணம் செலுத்தியோரிடம், வீட்டை ஒப்படைக்க வேண்டும் தாமதமானால், வீடு வாங்கியவர் செலுத்திய தொகைக்கு, 10.9 சதவீத வட்டி அளிக்க வேண்டும் தாமதத்தால் விற்பனை ஒப்பந்தம் ரத்தானால், 45 நாட்களுக்குள், கட்டுமான நிறுவனம் பெற்ற தொகையை திருப்பித்தர வேண்டும் 'ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டாம்' என, பணம் செலுத்தியவர் விரும்பினாலும், தாமத காலத்திற்கு வட்டி தொகையை பெற, அவர் தகுதி பெறுவார் மழை,
வெள்ளம், புயல் போன்ற இயற்கை காரணங்களால், கட்டுமான பணிகள் தாமதமானால்,
அத்தகைய சூழலில், பில்டர் அபராதம் செலுத்த வேண்டியதில்லை வீடு வாங்குவோர், உரிய காலத்தில் தொகையை செலுத்தாவிட்டால், ஒப்பந்தத்தை, பில்டர்கள் ரத்து செய்யலாம் ஒரு
குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்குவோருக்கு, அதில், எத்தனை வீடுகள்
கட்டப்படுகின்றன, பரப்பளவு, பொது பயன்பாட்டு இடங்கள், வாகன நிறுத்துமிட
ஒதுக்கீடு போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும் புதிய பத்திரத்தை பதிவு செய்யும் போது, இந்த விதிகளை கட்டுமான நிறுவனங்களும், வீடு வாங்குவோரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த விதிகள், பணத்தை வாங்கி, மக்களை அலைக்கழிக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமையும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...