செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக 'நாசா' விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர்.
சூரிய குடும்பத்தில் உள்ள சிவப்பு கோளான செவ்வாய்
கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான சூழல் உள்ளதா என்பதை ஆராய்ச்சி
செய்யும் பணியில் சில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம்(நாசா) தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலத்தில் இருந்து வரும் தகவல்களை ஆய்வு செய்கிறது.
இந்நிலையில், செவ்வாயில் உடோபியா பிளனிசியா பகுதியில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 மீட்டர் தடிமனில் மணல் ஈரப்பகுதி உள்ளதாகவும், அது 12,100 கன கி.மீ., பரப்பளவுக்கு உள்ளதாகவும் 'நாசா' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பரப்பளவு அமெரிக்காவின் சுப்பீரியர் ஏரியின் பரப்பளவை விட பெரியது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் செவ்வாய் ஆராய்ச்சிக்கென 'மங்கள்யான்' விண்கலத்தை அனுப்பியுள்ளது.
"உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு Court case எந்த மட்டத்தில் உள்ளது தெளிவுபடுத்துங்கள்
ReplyDelete