தமிழக அரசு பள்ளிகளுக்கான துாய்மை இந்தியா போட்டியில் மாநில அளவில்
வென்ற பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தேசிய போட்டிக்கு
தகுதிபெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் துாய்மை இந்தியா
திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளை ஊக்கப்படுத்சிறந்த துாய்மையான நகர், புறநகர்
பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் பள்ளியின் குடிநீர், கழிப்பறை வசதி, சுகாதாரம்
உள்ளிட்டவை சிறப்பாக உள்ளதா என சிறப்பு குழுவினர் ஆய்வுசெய்தனர். இதில்
தமிழகத்தில் மொத்தம் 5 பள்ளிகள் மாநில அளவில் தேர்வாகின. அதில் பழநி அரசு
மகளிர் மேல்நிலைப் பள்ளியும் ஒன்று.தலைமையாசிரியர் பழனிச்சாமி கூறியதாவது:
மாவட்ட அளவிலான தேர்வுக்கு பள்ளியில் செய்துள்ள வசதிகள் குறித்து வீடியோ
ஆதாரத்துடன் விண்ணப்பித்தோம். அதில் தேர்வாகியதால், அக்.,27ல் மாநில
ஒருங்கிணைப்பாளரான பொதுப்பணித்துறை பொறியாளர் மணிமேகலை மூலம் ஆய்வு
செய்தனர். பள்ளியை நன்றாக வைத்துள்ளதாக பாராட்டி ரூ.5 ஆயிரம் பரிசு
தந்தனர்.
அவர்களது அறிக்கையை தொடர்ந்து மேல்நிலைப் பள்ளிகளில் நகர்ப்பகுதியில் மாநில
அளவில் எங்கள் பள்ளி தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி
பெற்றுள்ளது. மத்திய மனிதவளதுறை தேசியக்குழுவினர் விரைவில் பள்ளியில்
திடீர் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள். அதில்
வென்றால் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு, சான்றிதழ் கிடைக்கும்,” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...