Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செல்லாத நோட்டுகளை எங்கு பயன்படுத்தலாம்?

புதுடில்லி:செல்லாத நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம், நேற்று இரவுடன் முடிந்தது; 
இனி, வங்கி கணக்குகளில் டிபாசிட் செய்யலாம் என அறிவித்துள்ள மத்திய அரசு, 500 ரூபாய் நோட்டை பல்வேறு சேவைகளுக்கு பயன் படுத்த கால அவகாசம் அளித்துள்ளது.


இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளி யிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளும் அவகாசம் நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. இனி, வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த முடியும்.

அதே நேரத்தில், பொது மக்களின் சிரமத்தை போக்கும் வகையில், 500 ரூபாய் நோட்டுகளை, குறிப்பிட்ட சில சேவைகளுக்கு, டிச., 15ம் தேதி வரை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால், 1,000 ரூபாய் நோட்டுகளை இனி பயன்படுத்த முடியாது;வங்கி கணக்கில் தான் செலுத்தவேண்டும். இவ்வாறு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவிப்பின்படி, 500 ரூபாய் நோட்டு களை கீழ்க்கண்ட இடங்களில், டிச., 15 வரை பயன் படுத்தலாம்:
* வாகன சுங்கச் சாவடிகள்; பெட்ரோல் பங்க்குகள்
* மத்திய, மாநில, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில், மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்துக்கு பயன்படுத்தலாம். ஒரு மாணவ ருக்கு, அதிகபட்சம், 2,000 ரூபாய் வரை செலுத்தலாம்
* அரசு கல்லுாரி மாணவர் கட்டணம்
* ரூ.500 வரையிலான மொபைல் போன் ரீசார்ச்
* அரசு அங்கீகரித்துள்ள நுகர்வோர் கூட்டுறவு சங்க கடைகளில், அதிகபட்சம்,5,000 ரூபாய் வரை
* அரசு பாலகங்கள்
* குடிநீர், மின்சார கட்டணம்
* அரசு மருத்துவமனைகள்
* டாக்டர் 'சீட்'டுடன், மருந்தகங்களில்
* ரயில்வே, அரசு பஸ், விமான டிக்கெட் வாங்குவதற்கு
* மயானங்கள்
* சர்வதேச விமான நிலையங்களில், விமான பயணிகள், 5,000 ரூபாய் வரை செலவிடலாம்
* சமையல் 'காஸ்' சிலிண்டர்
* ரயில் பயணத்தின் போது, உணவுகளுக்கு
* புறநகர் மற்றும் மெட்ரோ ரயில் டிக்கெட்
* தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவிட நுழைவு கட்டணம்
* மத்திய, மாநில, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டணங்கள், அபராதம் போன்றவற்றுக்கு
* கோர்ட் கட்டணங்கள்
* அரசு நடத்தும் மையங்களில் விதைகள் வாங்க.
இந்த இடங்களில், தகுந்த ஆதாரங்களுடன், செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive