நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம்
அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று(நவ.,8) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது
நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.
இதனையடுத்து நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறியதாவது: நாடு
முழுவதும் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.
கள்ளநோட்டு புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு
உதவும். இதன் மூலம் மக்களின் பணத்திற்கு பாதுகாப்பு குறைபாடு இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...