ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள, 174 பள்ளிகளை மீண்டும் திறக்க, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
போர்
நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இம்மாதம், 1ம்
தேதி, பாக்., படையினர் நடத்திய தாக்குதலில், இரண்டு குழந்தைகள் உட்பட,
எட்டு பேர் பலியாகினர்; 22 பேர் காயமடைந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்.,
ராணுவ முகாம்கள் மீது நம் வீரர்கள் தாக்குதல் நடத்தியதில், 14 ராணுவ
முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து, இரு நாட்டு எல்லையில் பதற்றம்
ஏற்பட்டது.
இதன் காரணமாக, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில்,
சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள, 174 பள்ளிகளுக்கு, இம்மாதம், 1ம் தேதி
முதல், காலவரையற்ற விடுமுறை அளித்து, மாநில அரசு உத்தரவிட்டது.
இதனால், ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி
பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பின், 174
பள்ளிகளையும் மீண்டும் திறக்க, மாநில அரசு உத்தரவிட்டுஉள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...