பள்ளிக்கு செல்லும் மாணவிகளை கேலி செய்த மாணவர்களை தோப்புகரணம் போட வைத்து தண்டனை வழங்கிய போலீசார். மாணவிகள் நிம்மதியடைந்தனர்.
துாத்துக்குடியில்
பள்ளி செல்லும் பள்ளி வளாகத்திற்கு அருகே நின்று பள்ளி மாணவர்கள் கேலி
செய்து வந்தனர். இரு சக்கர வாகனத்தில் ஹாரன்களை சத்தமாக அலறவிட்டு மாணவிகளை
பயமுறுத்தி வந்தனர்.
இது குறித்து தென் பாகம் போலீசாரிடம்
மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் பழைய
மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளியின் அருகே நேற்று காலை கண்காணித்தனர்.
அப்போது மாணவிகளை கேலி செய்த, ஹாரன் ஒலியால்
மிரட்டிய மாணவர்களை பிடித்தனர். அதே இடத்தில் மாணவர்களை தோப்புகரணம் போட
செய்து தண்டனை வழங்கினர். மாணவர்கள் என்பதால் எச்சரிக்கை விடுத்து
பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மாணவிகள் நிம்மதியடைந்தனர்.
இதே போல் அனைத்து பள்ளிகள் முன்பும் போலீசார்
அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மாணவர்களை தண்டனை வழங்கினால்
மாணவிகள் நிம்மதியடைவார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...