Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளில் கழிப்பறை... அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

       அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற் படுத்த தாக்கலான வழக்கில், 'மேலும் அவகா சம் தேவை' என்ற அரசுத்தரப்பு பதிலை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 'ஏன் போர்க்கால நடவடிக்கை எடுக்கக்கூடாது?' என கேள்வி எழுப்பி விசாரணையை ஒத்தி வைத்தது.


மதுரை ஆனந்தராஜ் 2014ல் தாக்கல் செய்த மனு:

'தமிழகத்தில் 5720 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை' என 2014 ஆக.,8 தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. திறந்தவெளியை கழிப் பிடமாக பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும். பயனற்ற கழிப்பறைகளை பயன் பாட்டிற்கு கொண்டுவர மத்திய, மாநில அரசு களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவுபடி மதுரை,திண்டுக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களில் சில அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி களில் வழக்கறிஞர் கமிஷனர்கள் ஆய்வு செய்தனர். 

அவர்கள், 'மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பறைகள், தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளன. போதிய துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என்பன உட்பட பரிந்துரைகளை அறிக்கையாக தாக்கல் செய்தனர்.

'இக்குறைகளை நிவர்த்தி செய்யவும், பள்ளிக ளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் எத்தகைய உறுதியான நடவடிக்கை 

மேற்கொள்ளப்படும் என்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என நவ.,2ல் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நவ.,11ல் முதன்மைச் செயலரின் அறிக்கையை படித்த நீதிபதிகள், 'அறிக்கை ஒரே கதையாக உள்ளது. திட்டம் மற்றும் அதை நிறைவேற்று வதற்கான நிதி ஆதாரம் பற்றி எதுவும் குறிப்பிட வில்லை. அதை நிராகரிக்கிறோம்' என அதிருப் தியை வெளிப்படுத்தினர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், 'பள்ளிகளில் கழிப்பறைஅமைக்க தேவையான நிதியை எவ்வாறு பெறுவது, எவ்வளவு காலத்திற்குள் நிறைவேற்றுவது என்பது பற்றிய தெளிவான, திடமான திட்ட அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் நவ.,18ல் தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.

நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, டி.கிருஷ்ணகுமார் கொண்ட அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. முதன்மைச் செயலரின் அறிக்கையை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் (ஏ.ஏ.ஜி.,) சமர்ப்பித்தார். இதை படித்து அதிருப்தி அடைந்த நீதிபதிகள், 'அறிக்கை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை,' என்றனர்.


மேலும் நடந்த விவாதம்:


நீதிபதிகள்: அரசுப் பள்ளிகளுக்கு மின்கட்டணமாக (சிறப்பு பயன்பாடு) யூனிட்டிற்கு 5.75 ரூபாய் வசூலிக் கப்படுகிறது. இது வணிக பயன்பாட்டிற்குரிய கட்டணத்தைவிட அதிகம். இதற்கு அரசு போதிய நிதி ஒதுக்குகிறதா?

அரசுப் பள்ளிகளில் 28 லட்சத்து 25 ஆயிரம் மாணவர் கள் படிக்கின்றனர். 20 பேருக்கு ஒன்று வீதம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 288 கழிப்பறைகள் தேவை. ஆனால் சிறுநீர் கழிக்கக்கூடிய 66 ஆயிரத்து 610 கழிப்பறைகள்தான் உள்ளன. எவ்வளவு காலத்திற் குள் தேவையான கழிப்பறைகளை அரசு அமைக்கும்?
ஏ.ஏ.ஜி: இரண்டு ஆண்டுகளுக்குள்அமைக்கப்படும்.

நீதிபதிகள்: 'அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி களில் போதிய,முழுமையான கழிப்பறைகள் உள்ளன. நபார்டு திட்டம் மற்றும் தொண்டு நிறு வனங்கள் மூலம் கூடுதல் கழிப்பறைகள் கட்டப் பட்டுள்ளன' என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், 

இந்நீதிமன்றத்தில் ஏற்கனவே தவறான அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

இந்நீதிமன்றத்தை தவறாக நடத்தியுள்ளார். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் 
உள்ளது.இது பற்றிய ஆய்வு செய்யவே இந் நீதிமன்றம் வழக்கறிஞர்களை, கமிஷனர்களாக நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இயற்கை உபாதையை போக்க, இன்னும் மரத்திற்கு அடியில் மாணவிகள் ஒதுங்கும் நிலை உள்ளது.

இந்நீதிமன்றம், 'அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தண்ணீர் வசதியுடன் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும்.பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என 2014 ல் உத்தர விட்டது. 'பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்ப டுத்த வேண்டும்' என உச்சநீதி மன்றம் 2012 ல் 
உத்தரவிட்டது.

சுனாமி மற்றும் வெள்ள பாதிப்பின்போது அரசு உடனடி நிவாரண நடவடிக்கை மேற்கொள்கி றது. இவ்விவகாரத்தில் போர்க்கால அடிப்படை யில், நடப்பு நிதியாண்டிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?

ஏ.ஏ.ஜி.,: நடப்பு நிதியாண்டில் சாத்தியமில்லை. அடுத்த நிதியாண்டில் 75 ஆயிரம் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 22 ஆயிரம் கழிப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப் பட்டு, பணி நடக்கிறது.

நீதிபதிகள்: பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் நவ.,22 ல்தெளிவான அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதம்நடந்தது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive