தமிழக அரசு பணியில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate in computer on office automation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
(இந்த பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு, அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றாலும்கூட பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால் தகுதிகாண் பருவம் முடிவடைவதற்குள் கண்டிப்பாக அத்தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய தேர்வு 2017 ஜனவரி மாதம் 7, 8-ம் தேதிகளில் நடத்தப் படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 11-ம் தேதி என்று முன்பு அறிவிக் கப்பட்டிருந்தது. தற்போது, ஆன்லைனில் (www.tndote.org) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 18-ம் தேதி வரையும், பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ் நகல்கள் (எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ், தட்டச்சு சான்றிதழ் நகல்) மற்றும் ரூ.530-க்கான டிமாண்ட் டிராப்டுடன் சமர்ப்பிக்க கடைசி தேதி நவம்பர் 25-ம் தேதிவரையும் நீட்டிக்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னு அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...