சென்னை பல்கலை துணை வேந்தராக இருந்த தாண்டவன், ஜனவரியில் ஓய்வு பெற்றார்.
புதிய துணைவேந்தரை நியமிக்க, தேடல் குழு அமைக்கப்பட்டு, இந்த குழு, அரசிடம்
அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.
துணைவேந்தர் இல்லாததால், பல்கலை நிர்வாகம், உயர்கல்வி
செயலர் கார்த்திக் பொறுப்பில் உள்ளது. இந்நிலையில், பட்டமளிப்பு விழா
நடத்த, பல்கலையில் முடிவு எடுக்கப்பட்டது. பட்டச் சான்றிதழில், துணை
வேந்தருக்கு பதில், கார்த்திக் கையெழுத்திட முடிவானது. அதற்கு, சிண்டிகேட்
கூட்டத்தில், உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்த
பிரச்னை சட்டத் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரம், துணை
வேந்தர் கையெழுத்து இல்லாமல், பட்டச் சான்றிதழ் வழங்கலாமா; அதற்கு, பல்கலை
விதிகளில் இடம் உள்ளதா என, விதிகளை புரட்டிப் பார்க்க, பல்கலை நிர்வாகம்
முடிவு செய்துஉள்ளது. இந்த ஆய்வுக்கு பின்னரே, பட்டமளிப்பு விழா
நடத்தப்படும் என, தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...