புதுடில்லி:கறுப்புப் பணத்தை வங்கியில், 'டிபா சிட்' செய்வோருக்கு, 60
சதவீத வரி மற்றும் அபராதம் விதிப்பது குறித்து, மத்திய அமைச்ச ரவை
கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர
வைக் கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட
முடிவுகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை.
செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 நோட்டுகள் அனைத்தையும் திரட்ட,
மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதிக வரி விதிக்கப்படும் என்ற பயத்தில், அதை
அழிப்பதை தடுக்கும் வகையில், தகுந்த வரியை விதிப்பது குறித்து கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, கறுப்புப் பணத்தை தாமாக முன்வந்து
செலுத்தும் திட்டத் தில், 'வரி மற்றும் அபராதமாக, 45 சதவீதம் விதிக்
கப்படும்'என, அறிவிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தாதோர், தங்களிடம்
உள்ள கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்யும் வகையில், புதிய திட்டத்தை
அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, வரி மற்றும் அபராதமாக, 60 சதவீதம் வசூலிப்பது குறித்து
கூட்டத்தில் முடி வெடுக் கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக, நடப்பு
பார்லி., கூட்டத் தொடரிலேயே, வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்வது
குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...