தமிழகத்தில், பள்ளி கல்வியை முன்னேற்றுவது
குறித்து, கொரியா மற்றும் தமிழக கல்வி அதிகாரிகள் கருத்துக்களை
பரிமாறினர்.
தமிழக பள்ளி கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், சென்னையில் கருத்து பரிமாற்ற
கருத்தரங்கம் நேற்று நடந்தது.
இதில், கொரியன் குடியரசு
துாதர் கியுங்சோ கிம் பேசுகையில், ''தமிழக மாணவர்கள், உயர் கல்விக்கும்,
ஆராய்ச்சி படிப்புக்கும், கொரியாவுக்கு வரலாம். அதற்கு தேவையான வசதிகள்
செய்து கொடுக்க தயார்,'' என்றார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர்
சபிதா, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் பங்கேற்று,
தமிழக பள்ளிக்கல்வி வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...